கதையோடு கற்போம் தமிழ் - தலைமுறை
அனு, அக்கா, ஆன்ட்டி (மாமி) மாமி, "பொங்கல் வாழ்த்துகள்", எனக் கூறியவாறே ஒரு சிறிய பாத்திரத்தில் பொங்கல் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள், ரமா. மாமி, இந்த வருஷம் நான் மண் பானையில் பொங்கல் வச்சேன் (வைத்தேன்) . அதான் உங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வந்தேன். என்ன ரமா, இந்த வருஷம் புதுசா மண் பானைல பண்ணிருக்க..? அதுவா, நாங்க மேகமலை போன போது வழில குலாளர் பாளையம் கிராமத்துல இத வாங்கினேன். உங்களுக்கு தெரியுமோ - குலாளர் பாளையத்துல, பல தலமுறைகளாக இந்த மண் பாண்டம் செய்வது தான் குலத் தொழில். ஆனா பாருங்கோ, இப்ப சுமார் 20 குடும்பம் மட்டுமே பரம்பரை பரம்பரையா செய்து வரும் மண் பாண்ட தொழிலை செய்யறா. (செய்கிறார்கள்) பல பேர் பொறியடுப்பு (COOKER) மற்றும் உலோகப் பாத்திரங்களில் சமைக்கறதுனால, மண் பாண்டங்களுக்கான தேவை குறைந்து விட்டது. அதனால் பல பேர் அந்த கிராமத்துல வேற தொழிலுக்கு போயிட்டா. இதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்த அனு, தன் அம்மா சுமதியிடம், அம்மா, ரமா அக்கா பரம்பரை பரம்பரையா ன்னு சொன்னாளே. பரம்பரைன்னா என்ன? என்று வினவினாள். அனு, பரம்பரை என்பது ஏழு தலமுறைகளை குறிக்கிறது. அது என்னவென்றா...