கதையோடு கற்போம் தமிழ் - தமிழ் ஆண்டுகள்

அனு, அக்கா, ஆன்ட்டி (மாமி)

என்ன அனு, இன்னிக்கு வேலை இல்லையா? கணினி திறக்காமல் இருக்கிறதே? விடுப்பில். உள்ளாயா என்ன ? என்றவாறே உள்ளே வந்தாள் ரமா. 

"அக்கா, இன்றைக்கு சீனப் புத்தாண்டு, எனது சேவைப்பயனர் சிங்கப்பூர் ஆதலால், 2 நாட்கள் விடுமுறை. கொஞ்சம் நிம்மதி", என்றாள்.

"புலி" ஆண்டா ? என்றாள் ரமா. 

அது என்ன அக்கா "புலி" ஆண்டு ?

அனு, நம் தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெயர் கொண்டது போல், சீன நாள் காட்டிப்படி 12 பெயர்கள் உள்ளன. அது சுழற்சி முறையில் வரும். 

ஓ...அப்படியா, இது எனக்குத் தெரியாது என்றாள். 

அப்போது சமையற் கட்டிலிருந்து வந்த சுமதி, இரு கோப்பைகளில் அல்வா எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, தொடர்ந்தாள். 

அனு, ரமா தமிழ் வருடம் என்று கூறியவுடன் எனக்கு இந்த விஷயத்தை பகிர அவா. 

அனு இந்துக்களின் காலக் கணிப்பு முறையில் இரவு - பகல், வாரத்தின் நாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன.

இந்த ஆண்டு வட்டமானது, 60 ஆண்டுகளைக் கொண்டது. நம் சிறப்பே, இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டிற்கும் தனிப் பெயற்கள் சூட்டியது.

பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் நிறைவுறும் ஒரு சுற்று. மீண்டும் பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும். 

மாமி, இப்படி ஒரே பெயர்கள் திரும்பத் திரும்ப வருவதால் பிற்காலத்தில் குழப்பம் ஏற்படாதோ ? 

நீ கேட்பது புரிகிறது, ரமா. இந்த ஆண்டுகளின் கால அளவைகள் வானியல் விஞ்ஞானத்தின் படி மிகத் துல்லியமாக வரையறுக்கப் பட்டவை. நமது சூரியன்  பன்னிரெண்டு ராசிகளில் - மேஷம் முதல் மீனம்  வரை, சஞ்சரிக்கும் கால அளவானதே ஒரு வருடமாகக் கணிக்க பெற்றது. இது 365 நாட்கள் 6 மணித்துளிகள், 11 நிமிடம், 48 நொடிகள் என வானியல் விஞ்ஞானரீதியாக  கணிக்கபட்ட  ஒன்று. (பூமி சூரியனைச் சுற்று எடுத்துக்கொள்ளும். அதே காலம்.)

இந்த வருடங்களின் பிறப்பே, தமிழ் வருடப்பிறப்பு என்று இந்த ஆண்டுகளின் பெயரானது.

  1. பிரபவ
  2. விபவ
  3. சுக்கில
  4. பிரமோதூத
  5. பிரசோற்பத்தி 
  6. ஆங்கிரச
  7. ஸ்ரீமுக
  8. பவ
  9. யுவ
  10. தாது
  11. ஈஸ்வர
  12. வெகுதானிய
  13. பிரமாதி
  14. விக்கிரம
  15. விஷு 
  16. சித்திரபானு
  17. சுபானு 
  18. தாரண
  19. பார்த்திப 
  20. விய
  21. சர்வசித்து
  22. சர்வதாரி
  23. விரோகி
  24. விகிர்த்தி
  25. கர 
  26. நந்தன
  27. விஜய
  28. ஜய
  29. மன்மக 
  30. துர்முகி
  31. ஹேவிளம்பி
  32. விளம்பி 
  33. விகாரி
  34. சார்வாரி
  35. பிலவ
  36. சுபகிருது
  37. சோபகிருது
  38. குரோதி
  39. விசுவாசுவ 
  40. பராபவ
  41. பிலவங்க
  42. கீலக
  43. சௌம்ய
  44. சாதாரண
  45. விரோதிகிருது
  46. பரிதாபி  
  47. பிரமாதீச
  48. ஆனந்த
  49. ராட்சச 
  50. நள
  51. பிங்கள
  52. காலயுத்தி
  53. சித்தார்த்தி
  54. ரௌத்திரி
  55. துர்மதி
  56. துந்துபி
  57. ருத்ரோத்காரி
  58. ரக்தாட்சி
  59. குரோதன 
  60. அட்சய

இப்போது பிலவ ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் வந்தால் சுபகிருது தொடங்கும். 

அம்மா, எனக்கு ஆண்டின் பெயர் 'பிலவ' என்று தெரியும். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு வரலாறு என்பது தெரியாது, என்றாள், அல்வாவை  சுவைத்தவாறே.

மாமி, "அல்வா நன்றாக உள்ளதே, கோதுமை அல்வாவா (அது மாதிரி தெரியவில்லையே) ?" என்றாள் ரமா. 

இல்லடிம்மா, இது ஆப்பிள் அல்வா - ஒரு புதிய மாறுபட்ட பதார்த்தத்தை அனுவிற்காக செய்தேன். என்று கூறினாள் .

"ஒ, நல்ல சுவை. நானும் ஒருமுறை செய்து பார்க்கிறேன்" என்றவாறே செய்முறையை கேட்டுக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள் ரமா.

தகவல் சேகரிப்பு

திரு. S. சேதுராமன்
நிலைய அதிகாரி (ஓய்வு)
தெற்கு ரயில்வே

கதை வடிவம் : கிரு. விஜயராகவன்

Comments

Popular posts from this blog

கதையோடு கற்போம் தமிழ் - தலைமுறை

Amendment to Airports Authority of India (Major Airports) Development Fees Rules, 2011