Posts

Showing posts from 2022

கதையோடு கற்போம் தமிழ் - தமிழ் ஆண்டுகள்

அனு , அக்கா , ஆன்ட்டி (மாமி) என்ன அனு, இன்னிக்கு வேலை இல்லையா? கணினி திறக்காமல் இருக்கிறதே? விடுப்பி ல். உள்ளாயா என்ன ? என்றவாறே உள்ளே வந்தாள் ரமா.  "அக்கா, இன்றைக்கு சீனப் புத்தாண்டு, எனது சேவைப்பயனர் சிங்கப்பூர் ஆதலால், 2 நாட்கள் விடுமுறை. கொஞ்சம் நிம்மதி", என்றாள். ஓ "புலி" ஆண்டா ? என்றாள் ரமா.  அது என்ன அக்கா "புலி" ஆண்டு ? அனு, நம் தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெயர் கொண்டது போல், சீன நாள் காட்டிப்படி 12 பெயர்கள் உள்ளன. அது சுழற்சி முறையில் வரும்.  ஓ...அப்படியா, இது எனக்குத் தெரியாது என்றாள்.  அப்போது சமையற் கட்டிலிருந்து வந்த சுமதி, இரு கோப்பைகளில் அல்வா எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, தொடர்ந்தாள்.  அனு, ரமா தமிழ் வருடம் என்று கூறியவுடன் எனக்கு இந்த விஷயத்தை பகிர அவா.  அனு இந்துக்களின் காலக் கணிப்பு முறையில் இரவு - பகல் , வாரத்தின் நாட்கள் , மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டமானது, 60 ஆண்டுகளைக் கொண்டது. நம் சிறப்பே, இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டிற்கும் தனிப் பெயற்கள் சூட்டியது. பிரபவ ஆண்டில் த...

கதையோடு கற்போம் தமிழ் - தலைமுறை

அனு, அக்கா, ஆன்ட்டி (மாமி) மாமி, "பொங்கல் வாழ்த்துகள்", எனக் கூறியவாறே ஒரு சிறிய பாத்திரத்தில் பொங்கல் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள், ரமா.  மாமி, இந்த வருஷம் நான் மண் பானையில் பொங்கல் வச்சேன் (வைத்தேன்) . அதான் உங்களுக்கும் கொஞ்சம் கொண்டு வந்தேன். என்ன ரமா, இந்த வருஷம் புதுசா மண் பானைல பண்ணிருக்க..? அதுவா, நாங்க மேகமலை போன போது வழில குலாளர் பாளையம் கிராமத்துல இத வாங்கினேன். உங்களுக்கு தெரியுமோ - குலாளர் பாளையத்துல, பல தலமுறைகளாக இந்த மண் பாண்டம் செய்வது தான் குலத் தொழில். ஆனா பாருங்கோ, இப்ப சுமார் 20 குடும்பம் மட்டுமே பரம்பரை பரம்பரையா செய்து வரும் மண் பாண்ட தொழிலை செய்யறா. (செய்கிறார்கள்) பல பேர் பொறியடுப்பு (COOKER) மற்றும் உலோகப் பாத்திரங்களில் சமைக்கறதுனால, மண் பாண்டங்களுக்கான தேவை குறைந்து விட்டது. அதனால் பல பேர் அந்த கிராமத்துல வேற தொழிலுக்கு போயிட்டா.  இதையெல்லாம் உற்று கவனித்துக் கொண்டிருந்த அனு, தன் அம்மா சுமதியிடம், அம்மா, ரமா அக்கா பரம்பரை பரம்பரையா ன்னு சொன்னாளே. பரம்பரைன்னா என்ன? என்று வினவினாள். அனு, பரம்பரை என்பது ஏழு தலமுறைகளை குறிக்கிறது. அது என்னவென்றா...

கதை மூலம் கற்போம் தமிழ் - 1

 எனது  கணினி (LAPTOP)  சற்றே பழசாகி விட்டதால், ஒரு நல்ல மடிக் கணினிக்காக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சீனாவில் இருந்து வந்த என் பால்ய நண்பன் நடராஜன்  அளாவியில் (WE CHAT)  தொடர்பு கொள்ள (சீனாவில்  புலனம் (WHATSAPP)  கிடையாது. அளாவிதான் பயன்பாட்டில்), ஆலோசனை கேட்டேன். அவன், உடனே என்னிடம் "என்ன உபயோகம்" என்று வினவி அதற்கு ஏற்றாற்போல்  உள்ளமைவை (CONFIGURATION)  சொல்வதாக கூறினான்.  நான் அவனிடம், இது எனது இல்ல பயன்பாட்டிற்கு மட்டும் தான். மற்றும் எனது மகனின்  நிகழ்நிலை (ONLINE)  கல்விக்காகவும் பயன்படுத்த எண்ணுகிறேன். "இந்த  எ ண்மின் (DIGITAL)  உலகில், எனது கணினியை  ஒளிர்விமுனை (LED)  தொலைக்காட்சியில் இணைத்து இயக்க வேண்டும். திரை பெரியதாக இருப்பதால் எழுத்து பெரிதாக தெரியும். மற்றும் கண்களும் வருந்தாமல் இருக்கும்" என்றேன். அவனோ, "தற்போது வரும் கருவிகள்  சாளரம் 10 (WINDOWS 10)   இயக்க முறைமை (OPERATING SYSTEM)  நிறுவியிறுப்பதால் கணிணிகளை  வடம் (CABLE)  மூலமாக அல்லது  ஊடலை (BLUETOOT...