கதையோடு கற்போம் தமிழ் - தமிழ் ஆண்டுகள்
அனு , அக்கா , ஆன்ட்டி (மாமி) என்ன அனு, இன்னிக்கு வேலை இல்லையா? கணினி திறக்காமல் இருக்கிறதே? விடுப்பி ல். உள்ளாயா என்ன ? என்றவாறே உள்ளே வந்தாள் ரமா. "அக்கா, இன்றைக்கு சீனப் புத்தாண்டு, எனது சேவைப்பயனர் சிங்கப்பூர் ஆதலால், 2 நாட்கள் விடுமுறை. கொஞ்சம் நிம்மதி", என்றாள். ஓ "புலி" ஆண்டா ? என்றாள் ரமா. அது என்ன அக்கா "புலி" ஆண்டு ? அனு, நம் தமிழ்ப் புத்தாண்டில் ஒவ்வொரு வருடமும் ஒரு பெயர் கொண்டது போல், சீன நாள் காட்டிப்படி 12 பெயர்கள் உள்ளன. அது சுழற்சி முறையில் வரும். ஓ...அப்படியா, இது எனக்குத் தெரியாது என்றாள். அப்போது சமையற் கட்டிலிருந்து வந்த சுமதி, இரு கோப்பைகளில் அல்வா எடுத்து வந்து இருவருக்கும் கொடுத்து விட்டு, தொடர்ந்தாள். அனு, ரமா தமிழ் வருடம் என்று கூறியவுடன் எனக்கு இந்த விஷயத்தை பகிர அவா. அனு இந்துக்களின் காலக் கணிப்பு முறையில் இரவு - பகல் , வாரத்தின் நாட்கள் , மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டமானது, 60 ஆண்டுகளைக் கொண்டது. நம் சிறப்பே, இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டிற்கும் தனிப் பெயற்கள் சூட்டியது. பிரபவ ஆண்டில் த