கதை மூலம் கற்போம் தமிழ் - 1
எனது கணினி (LAPTOP) சற்றே பழசாகி விட்டதால், ஒரு நல்ல மடிக் கணினிக்காக பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சீனாவில் இருந்து வந்த என் பால்ய நண்பன் நடராஜன் அளாவியில் (WE CHAT) தொடர்பு கொள்ள (சீனாவில் புலனம் (WHATSAPP) கிடையாது. அளாவிதான் பயன்பாட்டில்), ஆலோசனை கேட்டேன். அவன், உடனே என்னிடம் "என்ன உபயோகம்" என்று வினவி அதற்கு ஏற்றாற்போல் உள்ளமைவை (CONFIGURATION) சொல்வதாக கூறினான். நான் அவனிடம், இது எனது இல்ல பயன்பாட்டிற்கு மட்டும் தான். மற்றும் எனது மகனின் நிகழ்நிலை (ONLINE) கல்விக்காகவும் பயன்படுத்த எண்ணுகிறேன். "இந்த எ ண்மின் (DIGITAL) உலகில், எனது கணினியை ஒளிர்விமுனை (LED) தொலைக்காட்சியில் இணைத்து இயக்க வேண்டும். திரை பெரியதாக இருப்பதால் எழுத்து பெரிதாக தெரியும். மற்றும் கண்களும் வருந்தாமல் இருக்கும்" என்றேன். அவனோ, "தற்போது வரும் கருவிகள் சாளரம் 10 (WINDOWS 10) இயக்க முறைமை (OPERATING SYSTEM) நிறுவியிறுப்பதால் கணிணிகளை வடம் (CABLE) மூலமாக அல்லது ஊடலை (BLUETOOT...